சமூக சேவை முகவைக்கு $3,000

கிருமித்தொற்று தொடர்பான செலவுகளைச் சமாளிக்கும் பொருட்டு ஒவ்வொரு சமூக சேவை அமைப்புக்கும் $3,000 உதவித்தொகையை அரசு வழங்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்துள்ளார். கிருமி நாசினி தெளித்தல், சுத்தம் செய்தல், கூடுதல் தனிநபர் பாதுகாப்புச் சாதனங்களை வாங்குதல் உள்ளிட்ட செலவுகளுக்கு இந்தத் தொகையைச் சமூக சேவை அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.