$30,000 மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற மலேசிய பெண்கள் இருவர் சிங்கப்பூரில் கைது

$30,000 மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற மலேசிய பெண்கள் இருவர் சிங்கப்பூரில் கைது

1 mins read
f583b288-792c-4eab-b9e2-3bd5d0690e6b
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் 1,014 கிராம் எடையுள்ள கஞ்சா அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக கஞ்சா கடத்த முயற்சி செய்த இரண்டு மலேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 19) அன்று அதிகாலை 4.48 மணியளவில் அந்தப் பெண்களின் காரில் 2,017 கிராம் எடையுள்ள இரண்டு பொதி கஞ்சா காரின் பின்புற இருக்கைக்கடியில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

22, 23 வயதுகளில் இருந்த அந்தப் பெண்கள் வந்த கார் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்டது.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் 1,014 கிராம் எடையுள்ள கஞ்சா அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு $30,000 (89,855 மலேசிய ரிங்கிட்) என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

#தமிழ்முரசு #மலேசியா #போதைப்பொருள் #கஞ்சா #ICA

குறிப்புச் சொற்கள்