'ஏ' நிலை தேர்வு: மாணவர்கள் சாதனை

'ஏ' நிலை தேர்வு: மாணவர்கள் சாதனை

1 mins read
e75a6ddf-6b63-441d-afa6-588ed7c2f586
தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள நேற்று பள்ளிகளுக்குச் சென்ற மாணவர்கள் பள்ளி மண்டபத்தில் கூடவில்லை. அதற்குப் பதிலாக, சிறுசிறு குழுக்களாக வகுப்புகளில் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர். கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. படம்: கல்வியமைச்சு -

ஜிசிஇ மேல்நிலை தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. இந்தத் தேர்வைக் கடந்த ஆண்டு எழுதிய மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

2006ஆம் ஆண்டில் தொடக்கக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு கடந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள்தான் ஆக அதிகமான தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு மொத்தம் 12,405 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 11,583 மாணவர்கள் (93.4 விழுக்காட்டினர்) குறைந்தது மூன்று எச்2 தேர்ச்சிகளையும் அறிவுசார் ஆய்வியல் பாடத்தில் தேர்ச்சியையும் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் நேற்று தெரிவித்தன.

2018ஆம் ஆண்டில் மேல்நிலை தேர்வு எழுதிய மாணவர்களில் 93.3 விழுக்காட்டினர் தேச்சி பெற்றனர்.

தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள நேற்று பள்ளிகளுக்குச் சென்ற மாணவர்கள் பள்ளி மண்டபத்தில் கூடவில்லை. அதற்குப் பதிலாக, சிறுசிறு குழுக்களாக வகுப்புகளில் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.