மேம்படுத்தப்பட்ட நீச்சல் பயிற்சித் திட்டம் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட நீச்சல் பயிற்சித் திட்டத்தை வடக்கு மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய திட்டம் வாயிலாக நீந்துவது, தண்ணீருக்குள் இருக்கும்போது பாதுகாப்பாக இருப்பது ஆகியவை பெரியர்களுக்கும் முதியோருக்கும் கற்றுக்கொடுக்கப்படும்.

பயிற்சியின்போது எதேச்சைபாணி நீச்சல் நீந்துவது குறித்து கற்றுக்கொடுக்கப்படும்.

வேகமாக நீந்துவதற்கு இந்த நீச்சல் முறை பயன்படுத்தப்படுகிறது.

ஆழமான நீச்சல் குளத்தில் தண்ணீரின் மேற்பரப்புக்கு மேல் தலையை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் செங்குத்தாக இருக்கவும் பயிற்சி அளிக்கப்படும். 

இது அவர்கள் மீட்கப்படும் சாத்தியத்தை அதிகரிக்கும் என்று வடக்கு மேற்கு வட்டாரத்தின் மேயர் டியோ ஹோ பின் கூறினார்.

பயிற்சி திட்டத்துக்கான அறிமுக விழா நேற்று புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள சென்ஜா-கேஷ்யூ நீச்சல் குளத்தில் நடைபெற்றது.