தமது சட்ட நிறுவனத்தின் பாதுகாப்பில் இருந்த $33 மில்லியனுக்கும் அதிகமான பணம் மாயமானதை அடுத்து, வழக்கறிஞர் ஒருவர் மீது புதிதாக 12 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.
பதிவாகியுள்ள 12 குற்றச்சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகள் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வழக்கறிஞர் என்கிற முறையில் ஜெஃப்ரி ஓங் சூ ஆன் நம்பிக்கை துரோககத குற்றம் புரிந்ததுடன் தொடர்புடையவை.
காணொளி மூலம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையான ஓங் மீது ஒரு மோசடிக் குற்றச்சாட்டும் பதிவாகி உள்ளது.
தற்போது அவர்மீது மொத்தம் 38 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.
பணம் மாயமானது தொடர்பாக கடந்த ஆண்டு தகவல் வெளியானதும் ஓங் தலைமறைவானார்.
கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் தேதியன்று தனியார் வாடகை கார் மூலம் அவர் மலேசியா சென்றதாக பிறகு தெரியவந்தது.
அவரை மலேசிய போலிசார் கைது செய்து சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்தனர்.
#வழக்கறிஞர்மீதுகுற்றச்சாட்டு #சிங்கப்பூர் #தமிழ்முரசு

