டாக்சி, தனியார் வாடகை கார்: பயணிகள் கூடுதல் திருப்தி

டாக்சி, தனியார் வாடகை கார்: பயணிகள் கூடுதல் திருப்தி

1 mins read
5ccf540d-1cfe-4de2-85bc-85ae1d2acb20
நேரடிப் பயணத்துக்கான போக்குவரத்துச் சேவைகளின் சராசரி திருப்திநிலைப் புள்ளிகள் 7.9லிருந்து 8.1க்கு உயர்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. கோப்புப்படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

நேரடிப் பயணத்துக்கான போக்குவரத்துச் சேவைகள் குறித்து பயணிகள் திருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட பயணிகளின் திருப்திநிலை இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

அதன் சராசரி திருப்திநிலைப் புள்ளிகள் 7.9லிருந்து 8.1க்கு உயர்ந்துள்ளது. பொதுப் போக்குவரத்து மன்றம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தனியார் வாடகை கார் சேவைகளுக்கான திருப்திநிலைப் புள்ளிகள் 7.2லிருந்து 9.2க்கு உயர்ந்துள்ளது. டாக்சி, தனியார் வாடகை கார், ஆகியவற்றின் அனைத்துச் சேவை அம்சங்கள் தொடர்பிலான திருப்தி நிலை புள்ளிகள் அதிகரித்துள்ளன.

டாக்சியைவிட தனியார் வாடகை கார்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கட்டண விலை முக்கிய காரணம் என்று ஆய்வில் பங்கெடுத்தவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது, தனியார் வாடகை கார்களை கைபேசி செயலிகள் வழியாக எளிதில் பெற முடிவதால் டாக்சியைவிட அவற்றை விரும்புவதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. 15 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட 1,503 டாக்சி, தனியார் வாடகை கார் பயணிகள் ஆய்வில் பங்கெடுத்தனர். காத்திருப்பு நேரம், முன்பதிவு செய்யும் வசதி, சேவை குறித்து தகவல், பயண வசதி, பயணப் பாதை குறித்து ஓட்டுநர் அறிந்து வைத்திருத்தல், சேவைப் பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பயணிகள் திருப்்திநிலைப் புள்ளிகளை வழங்கினர்.

டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகளில் உள்ள பாதுகாப்பு மிகவும் திருப்தி அளிப்பதாக ஆய்வில் பங்கெடுத்தோர் கூறினர்.