மையப் பணவீக்கம் 0.3% சரிந்தது

மையப் பணவீக்கம் 0.3% சரிந்தது

1 mins read
c3fb8fc5-1b17-4d66-8345-07b0d27ba884
குடியிருப்பு, தனியார் சாலைப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவினங்களை சேர்க்காத மையப் பணவீக்கம் கடந்த மாதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.3 விழுக்காடாகப் பதிவானது. படம்: எஸ்டி, மார்க் சியோங் -

சிங்கப்பூரில் மையப் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் மெதுவடைந்தது. பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, குறைந்த சேவைப் பணவீக்கம், பயனீட்டாளர் விலைக் குறியீடு மதிப்பிடும் முறையில் புதுப்பிப்பு ஆகியவை இதற்குக் காரணம் என்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.

குடியிருப்பு, தனியார் சாலைப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவினங்களை சேர்க்காத மையப் பணவீக்கம் கடந்த மாதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.3 விழுக்காடாகப் பதிவானது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மையப் பணவீக்கம் 0.6 விழுக்காடாகப் பதிவானது.