சிங்கப்பூர் கடற்படைக்குப் புதிய தலைவர்

சிங்கப்பூர் குடியரசுக் கடற்படையின் தலைவர் பதவியிலிருந்து ரியர் அட்மிரல் லியூ சுவேன் ஹோங் விலகுகிறார். அவருக்குப் பதிலாக அடுத்த மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரியர் அட்மிரல் ஏரன் பெங் யாவ் செங் கடற்படைத் தலைவராகப் பதவி வகிப்பார்.

 சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் தலைமைத்துவம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. அதன்படி இந்த மாற்றமும் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டது.

43 வயது ரியர் அட்மிரல் லியூ, கடற்படையின் தலைவராக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதியிலிருந்து இருந்து வருகிறார்.