$171,000 மதிப்புடைய போதைப்பொருளை கடத்தியதாக மூவர் கைது

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 62 வயது சிங்கப்பூரர்  ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 300 கிராம் ஐஸ் மற்றும் 1.5 கிலோ ஹெராயின் அவரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தோ பாயோவில் உள்ள நபரின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் அங்கு இருந்த 62 வயதுடைய சிங்கப்பூர் மாது ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இதன் தொடர்பில் 38 வயது மலேசிய ஆடவர் ஒருவரும் சிக்கியுள்ளார்.