மறுபயிற்சிக்கும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் ஊழியர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போதைய பொருளியல் மந்த நிலையில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள எண்ணும் ஊழியர்கள், வழங்கப்படும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள கூடுதல் உதவி தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தால் சென்ற ஆண்டு 49 விழுக்காட்டினர் மட்டுமே பலனடைந்ததாக நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது இர்ஷாத் பகிர்ந்துகொண்டார். நேர்த்தியான தொழில் பயிற்சித் திட்டங்கள் இருந்தால் வேலைத் தகுதியை உயர்த்த முடியும் என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றச் செய்தி: ஊழியர்களின் மறுபயிற்சிக்கு கூடுதல் ஆதரவு வேண்டும்
1 mins read

