நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளியல் மற்றும் ஊழியர்களின் மீள்திறனை உறுதிப்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் அதன் சிறிய, நடுத்தர நிறுவனங்களைக் கொண்டு உள்ளூரிலேயே ஒரு சூழல் கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதன்மூலம் நெருக்கடி காலங்களில் தன்னிறைவுடன் செயல்பட முடியும் என்றும் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார் மார்சிலிங்- யூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் டெங் கூன். முக்கியத் தேவைகள் அல்லது தேவையான சேவைகள் தொடர்பான விவகாரங்களை அரசாங்கம் அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப உள்ளூரிலேயே திறனாளிகளைத் திரட்டலாம் என்று சொன்னார் திரு ஓங்.
நாடாளுமன்றச் செய்தி: நீண்டகால பொருளியல் மீள்திறன்
1 mins read

