நாடாளுமன்றச் செய்தி: உடற்குறையுள்ளோர், முன்னாள் குற்றவாளிகளுக்கு கூடுதல் ஆதரவு

உடற்குறை உள்ளோரை வேலைக்கு நியமிக்கும் நிறுவனங்களுக்குச் சம்பளம் தொடர்பான சலுகைகளை வழங்கும் புதிய வேலை நியமன உதவித்தொகைத் திட்டம் பெரிதும் வரவேற்கப்படும் ஒன்று என பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸைனல் சப்பாரி கூறினார். இருப்பினும் உடற்குறைபாடு களுடைய சிங்கப்பூரர்களுக்காக அவர்களின் வேலை இடத்தில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்று அவர் நேற்று முன்தினம் நடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பகிர்ந்துகொண்டார். இதற்கிடையே முன்னாள் குற்றவாளிகளுக்கு நல்ல வேலை அமைவதில் சவால்கள் உள்ளதென சுட்டிய புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, புதிய வேலை நியமன உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் அவர்களையும் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.