சரிவை நோக்கி உலகப் பொருளியல்

வாஷிங்டன்: உலகப் பொருளியல் நெருக்கடிக்குப் பிறகு இந்த வாரம் உலகப் பொருளியல் பலவீனமடைந்து உள்ளது.

விநியோகம் பாதிக்கப்பட்டதுடன் பயனீட்டாளர்களின் தேவை குறைந்ததும் பொருளியல் பலவீனமடைந்ததற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பேங்க் ஆஃப் அமெரிக்கா இவ்வாண்டுக்கான தனது உலகப் பொருளியல் வளர்ச்சியை 2.8 விழுக்காட்டுக்குக் குறைத்துள்ளது. 2009ஆம் ஆண்டின் உலக நெருக்கடிக்குப் பின்னர் ஆக பலவீனமான நிலை இது.

சீனாவின் சுகாதார நெருக்கடி உலகளாவிய விநியோகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் ஊழியர்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற இயலாத நிலை நீடிப்பதும் அதற்கு ஒரு காரணம்.

ஆசிய நாடுகளின் சுற்றுப்பயணிகளின் போக்குவரத்து வீழ்ச்சி அடைந்து உள்ளது. இது உலகப் பொருளியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பொருளியல் நிபுணர் ஆதித்ய பாவே கூறியுள்ளார்.

ஆசிய பங்குச் சந்தைகள் நேற்று பெரு வீழ்ச்சி கண்டன. டௌ ஜோன்ஸ் தொழிலியல் குறியீடு 4.4 விழுக்காடு இறங்கி தனது வரலாற்றில் ஒருநாளைக்கான ஆக அதிக இறக்கத்தை வியாழக்கிழமை சந்தித்தது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் காலாண்டுக்கான தனது வருவாய் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறையும் என்று தெரிவித்துள்ளது.

புதிய ஐஃபோன்கள் சந்தேகம்

சீனாவில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகள் மந்த நிலையில் செயல்படுவதால் ஐஃபோன் விநியோகத்தில் தற்காலிக தடை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் உற்பத்தித்தளங்களைக் கொண்டு உள்ளவை உள்ளிட்ட பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களின் வருவாய் குறைந்து வருகிறது. உலகளவிலான சுற்றுப்பயணம் குறைந்து வருவதால் முதலாம் காலாண்டுக்கான தனது வருவாய் 2 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை குறையும் என்று மாஸ்டர்கார்ட் தெரிவித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த நான்காண்டு காணாத இறக்கத்தை கடந்த வாரம் சந்தித்தது.

நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,119 புள்ளிகளுக்கும் மேல் இறங்கியது. நிஃப்டி 335 புள்ளிகள் இறங்கியது. கிருமித்தொற்று பரவல் நிலவரம் மோசமடைந்துகொண்டே செல்வதால் பொருளியல் வளர்ச்சி நிச்சயமற்று உள்ளது.

அதன் காரணமாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் தவிர்த்து வருவதோடு ஏற்கெனவே செய்த முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர். சரிவு நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\

நெருக்கடியைவிட மோசமான நிலை

உலகின் ஆகப்பெரிய, துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் கொண்டுள்ள சீனாவின் தளவாடத்துறை கொரோனா கிருமி பரவல் காரணமாக முடங்கிப்போயுள்ளது. உலகக் கடல் துறை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. உலக நிதி நெருக்கடி காலத்தைக் காட்டிலும் இப்போதுதான் அதிக அளவிலான சரக்குக் கொள்கலன்கள் துறைமுகங்களில் தேங்கிக் கிடப்பதாக ஆர்ஃபாலைனர் என்னும் கடல் துறை தரவுச் சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

முடங்கிப்போன சீன பெருந்திட்டங்கள்

சீனாவைச் சேர்ந்தோர் அல்லது சீனாவுக்குச் சென்று வந்தோ ருக்கு உலகின் 133 நாடுகள் தடை விதித்துள்ளன. அதன் காரணமாக சீனாவின் டிரில்லி யன் மதிப்பிலான ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்ட வேலை கள் மந்தமடைந்துள்ளன. இலங்கையில் பெரும் பொருட் செலவில் சீனா உருவாக்கி வரும் போர்ட் சிட்டி திட்ட பணி கள் சீன ஊழியர் பற்றாக்குறை காரணமாக பாதியோடு நிற்கிறது. புத்தாண்டு கொண்டாட சீனா சென்ற ஊழியர்கள் திரும்பி வர வில்லை. இருக்கும் ஊழியர் களுடன் சேர்ந்து வேலை செய்ய உள்ளூர் ஊழியர்கள் மறுப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!