நீக்குப்போக்கான வேலையிட ஏற்பாடுகளை அரசு ஆதரிக்கும்  

வேலையுடன் குடும்பப் பொறுப்புகளைச் சமாளிக்க வேண்டியுள்ள பெற்றோருக்கு உதவும் திட்டங்களின் அங்கமாக அரசாங்கம் நீக்குப்போக்கான வேலையிட ஏற்பாடுகளை ஆதரிக்கும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்திருக்கிறார். இதைச் செயல்படுத்துவதற்கான புதிய கருவிகளையும்  வழிமுறைகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்தார். அத்துடன், இத்தகைய திட்டங்களை ஏற்று நடத்தும் முதலாளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்றார். குழந்தை பிறந்து ஓராண்டுக்குள் நான்கு வாரம் வரையிலான சம்பளமில்லாக் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு பொதுச்சேவையில் இருப்போருக்கு இவ்வாண்டு முதல் நிரந்தரமாகச் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.