அதிபர் ஹலிமா: எந்த சூழலுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்

1 mins read

நாட்டின் வலுவான நிதி நிலை காரணமாக கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த உதவியை வழங்க முடிந்தது. இதற்கிடையே தொடர்ந்து பொருளியல் உருமாற்றத்திற்கான நீண்ட கால குறிக்கோள்களில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று கூறினார். இந்த நினைவூட்டலைக் காணொளி வடிவில் தம் ஃபேஸ்புக் மூலம் அதிபர் வெளியிட்டிருந்தார். கிருமித்தொற்று சூழ்நிலை எப்போது தீரும் என்று உறுதியாகக் கூற முடியாத பட்சத்தில் எந்த சூழலுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார் திருவாட்டி ஹலிமா.