பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு $130 நன்கொடை வழங்கிய பணிப்பெண்ணுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனீசியரான அனின்டியா அஃபியாந்தாரி ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்தார்.
அவரது ஃபேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்ட ஒவ்வொரு முறையும் அவர் இன்னொரு
மின்னஞ்சலைப் பயன்படுத்தி வேறொரு ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கினார்.
இறுதியில் அவருக்கு இருந்த பல ஃபேஸ்புக் பக்கங்கள் தடை செய்யப்பட்டன. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அனின்டியா ஒப்புக்கொண்டார்.
பயங்கரவாதத்துக்கு நன்கொடை வழங்கிய குற்றத்துக்காக அனின்டியாவுக்கு முன், கடந்த சில வாரங்களில், இரண்டு
இந்தோனீசியப் பணிப்பெண்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

