சமூகத் தாதியருக்குக் கூடுதல் சம்பளம், சலுகைகள்

சமூகத் தாதியருக்குக் கூடுதல் சம்பளம், சலுகைகள்

1 mins read
3f6d86f0-62ee-412b-9175-d846b299747f
PHOTO: HOME NURSING FOUNDATION -

சமூகத் தாதியருக்கான தேவை அதிகம் இருப்பதாகவும் அவர்களுக்கான சம்பளம் உயரக்கூடும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அரசாங்கம் $150 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

உள்ளூர் தாதியர், ஆதரவுப் பராமரிப்பு ஊழியர்கள் என 4,000 பேருக்கு இத்தொகை பலனளிக்கும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் கூறினார்.

மூப்படையும் மக்கட்தொகையைக் கருத்தில்கொண்டு மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகளைப் பராமரிக்க சமூகத் தாதிகள் தேவைப்படுகின்றனர். இப்பணிக்கு பலரை ஈர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.