டாக்சிகளில் குழந்தை இருக்கைகள்; ரயில்களில் முன்னுரிமை பெட்டிகள்

டாக்சிகளில் குழந்தை இருக்கைகள்; ரயில்களில் முன்னுரிமை பெட்டிகள்

1 mins read

எஸ்எம்ஆர்டி டாக்சிகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகள் இலவசமாக வழங்கப்படும். 1.35 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட பிள்ளைகளின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஆறு மாத கால சோதனை நேற்று தொடங்கியது.

வடக்கு-கிழக்கு ரயில் பாதை ரயில்களில் முன்னுரிமை பெட்டிகள் அமைக்கப்படும். ஆறு பெட்டிகளைக் கொண்டுள்ள இந்த ரயில்களின் நடுவில் உள்ள இரு பெட்டிகள் முதியோர், கர்ப்பிணிகள், சக்கரநாற்காலி பயன்படுத்துவோர், உடற்குறையுள்ளோர், இளம் பிள்ளைக ளுடனான பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கும். பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க தொடங்கப்படும் இத்திட்டம் ஓராண்டு காலத்துக்கு சோதிக்கப்படும்.