சிங்கப்பூர் இளைஞரை காலணியால் அடித்த மலேசிய சமயப் பள்ளி ஆசிரியர்; முகத்தில் எலும்பு முறிவு

சிங்கப்பூர் இளைஞரை காலணியால் அடித்த மலேசிய சமயப் பள்ளி ஆசிரியர்; முகத்தில் எலும்பு முறிவு

2 mins read
435fc40e-2744-4970-a3d3-2638b69847aa
மூக்குக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள எலும்பு முறிந்துள்ளதால் உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்தனர். படங்கள்: நூரிடாயு ஸைனுடின் -

மகன் இமானின் விருப்பத்திற்கு இணங்கி அவனை மலேசியாவின் சிலாங்கூரிலுள்ள இஸ்லாமிய சமயப் பள்ளியில் சேர்த்தார் ஒற்றைப் பெற்றோரான திருவாட்டி நூரிடாயு ஸைனுடின், 40.

மகனின் 14வது பிறந்தநாளுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 27 அன்று அவனை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் சென்று பார்த்த பார்த்த அந்தத் தாயாருக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுவனுடைய முகத்தின் இடது பக்கம் வீங்கி இருந்தது. அத்துடன் அவனுக்குக் காய்ச்சலும் அதிகமாக இருந்தது.

விசாரித்ததில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தம் காலணியைக் கொண்டு இளைஞனின் முகத்தில் பலமாக அடித்தது தெரியவந்தது.

பள்ளியில் சக மாணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியதை அடுத்து, பள்ளியின் மூத்த ஆசிரியர் ஒருவரிடம் இமான் அடி வாங்கியதாக கூறப்பட்டது. இந்தச் சமப்வம் நிகழ்ந்தது பிப்ரவரி 18 அன்று.

அதையடுத்து இமானுக்குக் காய்ச்சல் ஏற்பட்டதுடன் சரியாக சாப்பிடவும் முடியவில்லை.

முகத்தின் இடது பக்கம் வீங்கியதுடன் கண்ணில் நீரும் வழியத் தொடங்கியது.

தன் தாயாரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச வேண்டும் என்று இமான் கேட்டபோது அவனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு இமானை அழைத்துச் சென்றார் அவனது தாயார்.

மகனுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அவரிடம் கூறினர்.

மூக்குக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள எலும்பு முறிந்துள்ளதால் உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓர் ஆசிரியர் இமானைக் காலணியால் அடித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக அப்பள்ளி முதல்வர் திருவாட்டி தூரிடாயுவிடம் தெரிவித்தார்.

அந்த ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதுடன் பள்ளியும் மலேசிய அதிகாரிகளும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்