சாஃப்ரா ஜூரோங் கிருமி சம்பவம்: விருந்தில் 600 பேர்

சாஃப்ரா ஜூரோங் கிருமி சம்பவம்: விருந்தில் 600 பேர்

1 mins read
6bf6e63a-fcec-4b04-b49e-76e1a0a97f9e
படம்: எஸ்டி, ஜேசன் குவா -

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளான பலர் தொடர்புடைய சாஃப்ரா ஜூரோங் விருந்து தொடர்பில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஹொக்கியன் மொழி பாடகர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி அவ்விருந்து நிகழ்ச்சி என்றும் அந்த ஆடல், பாடல் விருந்தில் சுமார் 200 பேர் பங்கேற்றதும் தெரிய வந்துள்ளது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஹொக்கிய மொழி பாட்டு வாத்தியாரான திருவாட்டி லியாங் ஃபெங்க்யியும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என ஷின் மின் சீன நாளிதழ் தெரிவித்துள்ளது. அதே பிப்ரவரி 15 இரவில் ஜாய் கார்டன் உணவகத்தின் மற்றொரு நிகழ்வறையிலும் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றதாக ஆடல், பாடலை வழிநடத்திய யிஜி, 58, என்னும் ஆடவர் கூறினார்.

அந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஹொக்கியன் மற்றும் கான்டனிஸ் பாடல் பயிற்றுநர் காவோ ஃபெய் ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கொண்டாட்டத்தில் சுமார் 400 பேர் பங்கேற்றதாக அந்த ஆடவர் மதிப்பிட்டார். ஒரே பாடகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பாட்டு கற்கும் மாணவர்கள் என்றும் கூறிய யிஜி, நண்பர்கள் என்பதால் அவர்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து புகைப் படம் எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். விருந்தில் பங் கேற்ற சிலரிடம் கிருமித்தொற்று இருந்ததாக கடந்த வியாழக் கிழமை தெரிவிக்கப்பட்டது.