கொரோனா கிருமி தொற்றுவதிலிருந்து பாதுகாக்க பல வகையான முகக்கவசங்கள் உள்ளன.
ஆனால் சோதனையில் ஆறு முகக் கவசங்களில் ஐந்து தேற வில்லை.
'சண்டே டைம்ஸ்' மேற்கொண்ட சோதனையில் சில முகக்கவசங்களில் தரமற்ற பொருட்கள் பயன் படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
மேலோட்டாமாகப் பார்த்தால் அனைத்து வகையான முகக் கவசங்களும் ஒன்றுபோல காணப்பட்டாலும் தரத்தில் வித்தியாசம் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
'வெல்கெம் பார்மசிட்டிகல்ஸ்' எனும் நிறுவனத்தின் இயக்குநரான வின்திரோப் வோங், "நுண்ணுயிர்க் கிருமிகளை வடிகட்டும் ஆற்றல்,
சுவாசிப்பு, உறிஞ்சும் தன்மை, தீப்பற்றாத தன்மை ஆகிய அம்சங்களில் அமெரிக்க, ஐரோப்பிய தரத்துக்கு ஈடாக இருக்கும் முகக் கவசங்களே சிங்கப்பூர் தேசிய கையிருப்பில் வைக்கப்படுகின்றன," என்றார்.
அவரது நிறுவனம் தயாரிக்கும் அறுவை சிகிச்சைக்கான முகக் கவசங்கள் பல்வேறு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
திரு வோங்கின் உதவியுடன் 'சண்டே டைம்ஸ்' தற்போது சந்தையில் கிடைக்கும் ஆறு வகையான முகக்கவசங்களை சோதித்துப் பார்த்தது. அப்போது ஆறில் ஐந்து முகக்கவசங்கள் சோதனையில் தேறவில்லை.
'வெல்கெம் பார்மசிட்டிகல்ஸ்' நிறுவனத்தின் 'அல்டிராகார்ட்', கோல்டன் குளோவ்ஸ், சென்ஸி மாஸ்க் ஆகிய மூன்றும் பெயர் இல்லாத மேலும் மூன்று வகையான முகக்கவசங்களும் சோதித்துப் பார்க்கப்பட்டன.
சிறந்த முகக்கவசங்களில் வெளிப்புற அடுக்கு நீரில் நனையாமல் இருக்க வேண்டும். நடுவில் உள்ள அடுக்கு நுண்ணுயிர்க் கிருமிகளை வடிகட்டும் விதத்தில் இருக்கும். அதே சமயத்தில் நுண்துளைகள் அதிகமாக இருக்காது. உள்ளே இருக்கும் அடுக்கு எச்சில், சளி, தும்மலால் ஏற்படும் எச்சில் துளிகள் ஆகியவற்றை உறிஞ்சும் தன்மை இருக்க வேண்டும்.
உறிஞ்சும் தன்மை எப்படி இருக்கிறது என்ற சோதனையில் ஐந்து முகக்கவசங்களில் உறிஞ்சும் தன்மை அவ்வளவாக இல்லை.
இதனை அணியும் பயனீட் டாளர் தும்மினால் எச்சில் துளிகளை மென்மையான தாள் உறிஞ்சாது. இதனால் முகத்திலேயே எச்சில் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. மற்ற அடுக்குகளிலும் குறைபாடு இருந்தன.
இதில் 'வெல்கெம் பார்மசிட்டிகல்ஸ்' நிறுவனத்தின் 'அல்டிராகார்ட்' மட்டும் சோதனையைக் கடந்து சென்றது.
இத்தகைய முகக்கவசங்கள் தேசிய இருப்பில் வைக்கப்பட்டு பின்னர் பல்வேறு மருத்துவமனை களுக்கு விநியோகிகப்படுகின்றன.

