ஹவ்காங்கில் இரு கார்கள் மோதிய விபத்தில் நான்கு பேர் காயம் அடைந்தனர். ஒரு காரிலிருந்த 26 வயது ஓட்டுநர் சுயநினைவுடன் மீட்கப்பட்டு டான் டோக் செங் மருத்துவமனையிலும் மற்றொரு காரிலிருந்து எட்டு வயது முதல் பத்து வயது வரையிலான மூன்று பயணிகள் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். ஹவ்காங் ஸ்திரீட் 91, ஹவ்காங் அவென்யூ 9 சந்திப்பில் நேற்று பிற்பகல் 12.25 மணியளவில் விபத்து நிகழ்ந்தது. சிவப்பு நிற காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார். நீல நிற காரில் மூன்று குழந்தைகளும் அவர் களது பெற்றோரும் இருந்தனர். பெற்றோர் காயமின்றி தப்பினர். குழந்தைகள் காயம் அடைந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லை.
இரு கார்கள் மோதிய விபத்தில் நால்வர் காயம்
1 mins read
ஹவ்காங்கில் விபத்துக்குள்ளான இரு கார்கள். படம்: தமிழவேல் -

