எஸ்ஐஏ விமானச் சிப்பந்திகள் கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு சனிக்கிழமையிலிருந்து அமலுக்கு வந்தது.
அண்மைய வாரங்களாக எஸ்ஐஏ தொடர்பான புதிய கொரோனா கிருமி தொற்றுச் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பெண் பயணி ஒருவருக்கு கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர், பிப்ரவரி 24ஆம் தேதி இத்தாலியில் உள்ள மிலான் நகரி லிருந்து எஸ்ஐஏ விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தார்.
அதற்கு மறுநாளே எஸ்ஐஏ விமானச் சிப்பந்தி ஒருவருக்கு கிருமி தொற்றியிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது அவருக்கு கிருமித் தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த விமானச் சிப்பந்தி, பிப்ரவரி இறுதிவாக்கில் பாரிசிலிருந்து எஸ்ஐஏ மூலம் சிங்கப்பூருக்குத் திரும்பினார். எஸ்ஐஏ விமானங்களில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் வைக்கப்பட்டிருந்தாலும் விமானச் சிப்பந்திகள் விரும்பினால் மட்டுமே அணியலாம் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், அண்மைய சம்பவங்கள் காரணமாக விமானச் சிப்பந்திகள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதிய சம்பவங்கள் பற்றி சுற்றறிக்கையில் விவரிக்கப்படவில்லை.
"முகக்கவசங்களை தற்காலிகமாக அகற்றியதற்காக

