மூன்று ஆண்டுகளுக்கு முன் தனது காதலியாக இருந்த ஒருவரைத் தாக்கி அவரது முகத் தில் பல்வேறு காயங் களை ஏற்படுத்திய மருத்துவர் ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
டாக்டர் கிளேரன்ஸ் டியோ ஷுன் ஜி (இடது படம்), 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி, காலை 4.12 மணிக்கு தம்முடன் உடலுறவு கொள்ள மறுத்த குமாரி ரேச்சல் லிம் என் ஹுயியை (வலது படம்) தனது ரெட்ஹில் வீட்டில் தாக்கினார். டாக்டர் டியோ இன்னும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ளார் என்று இணையத் தகவல்கள் கூறுகின்றன.
நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு டாக்டர் டியோ, குமாரி லிம்முக்குக் கடுமையான காயங்களை விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என்று தீர்ப் பளித்தார் மாவட்ட நீதிபதி டோ ஹான் லி.
சம்பவம் நடந்த நாளன்று டாக்டர் டியோவிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற குமாரி லிம்மை இழுத்து அறைக்குள் வைத்து பூட்டினார் டியோ. பின்னர் அவர் குமாரி லிம்மை சரமாரியாகத் தாக்கினார்.
அதே வீட்டில் இருந்த டியோவின் தந்தை சத்தம் கேட்டு, போலிசை அழைத்தார். டியோ விளைவித்த காயங்களால் குமாரி லிம் 21 நாட்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றார்.
டாக்டர் டியோ நேற்று $15,000 பிணையில் விடுவிக்கப் பட்டார். அவருக்கு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

