$143,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கின

$143,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கின

1 mins read
b9ec4f50-cf72-44a4-99a3-fac5169a78e6
-

ஹெராயின் உள்ளிட்ட $143,000 மதிப்புள்ள போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (சிஎன்பி) அதிகாரிகள் நேற்று முன்தினம் கைப்பற்றினர்.

அந்த நடவடிக்கையில் 24 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று ஆடவர்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிஎன்பி நேற்று தெரிவித்தது.

அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில், அவர்களில் ஒருவரது கார், மற்றவரது பதிவு செய்யப்பட்ட முகவரி ஆகிய இடங்களில் ஹெராயின், எக்ஸ்டசி, கெனபிஸ், கெட்டமின், எரிமின்-5 மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சிக்கின.

சந்தேகத்துக்குரிய அறுவரும் கைது செய்யப்பட்ட பிறகு, புக்கிட் பாத்தோக் வெஸ்ட்டில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் 16 கிராம் 'ஐஸ்', சிறிய அளவிலான கெட்டமின் போதைப்பொருட்களும் சிக்கின.