மலேசியாவில் சமய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 95 சிங்கப்பூரர்களை அடையாளப்படுத்த முயலும் மனிதவள அமைச்சு

மலேசியாவில் சமய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 95 சிங்கப்பூரர்களை அடையாளப்படுத்த முயலும் மனிதவள அமைச்சு

1 mins read
c6246507-2bce-4ef1-b7a6-c92d12410f9b
-

சிங்கப்பூரர்கள் தங்களது சமய வழக்கங்களைப் பின்பற்றும்போது கொவிட் 19 கிருமித்தொற்று குறித்து கவனத்துடன் இருக்குமாறு ஊக்குவிக்கப்பட்டு ள்ளனர். மலேசியாவில் நடைபெற்ற சமயக்கூட்டம் ஒன்றில் கொரோனா கிருமித்தொற்று ச் சம்பவங்கள் சில உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அந்தக் கூட்டத்தில் 95 சிங்கப்பூரர்கள் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெ ளிவந்துள்ள வேளையில் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் சுல்கிப்லி இந்த ஆலோசனையைத் தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூருக்கு வெளியே பிப்ரவரி 27ஆம் தேதிக்கும் மார்ச் 1ஆம் தேதிக்கும் இடையே இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக நம்பப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து மொத்தம் 10,000 பேர் கூடினர் என நம்பப்படுகிறது.

கொரோனா கிருமிப்பரவல் உலகளவில் நடப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் பிறரைத் தொடுவதைக் கட்டுப்படுத்த உள்ளூர் முஸ்லிம்கள் எடுத்துவரும் முயற்சிகளைத் திரு மசகோஸ் தமது பதிவில் சுட்டினார் .

கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 120,000ஐத் தாண்டிவிட்டுள்ளது. சிங்கப்பூரில் நோய் தொற்றியுள்ளோரின் எண்ணிக்கை 178 ஆக உள்ளது. இவர்களில் 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.