கொரோனா: சிங்கப்பூர் பள்ளிவாசல்கள் தற்காலிக மூடல்

நாளை முதல் குறைந்தது ஐந்து நாட்களுக்கு அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும். பள்ளிவாசல்களைக் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் இன்று தெரிவித்தது.

சிங்கப்பூரர்கள் பலர் பங்கேற்ற மலேசிய சமயக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற சிங்கப்பூரர்கள் சிலருக்கும் கொரோனா கிருமித் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிருமி பரவுவதைத் தடுக்க முயிஸ் பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

மஸ்ஜிட் முட்டைன், மச்ஜிட் காசிம், மஸ்ஜிட் ஹஜ்ஜா ஃபாத்திமா, ஜம்மே சூலியா ஆகிய நான்கு பள்ளிவாசல்கள் நேற்று நண்பகல் 1 முதலே மூடப்பட்டுவிட்டன. இந்தப் பள்ளிவாசள்கள்தாம் கொரோனா கிருமி தொற்றியவர் சிங்கப்பூர் திரும்பியதும் அடிக்கடி சென்ற பள்ளிவாசல்கள்.

மேலும் பள்ளிவாசல்களில் நடத்தப்படும் சொற்பொழிவுகள், சமய வகுப்புகள், பள்ளிவாசல் சார்ந்த பாலர் பள்ளி வகுப்புகள் யாவும் நாளை முதல் (மார்ச் 13) முதல் இரண்டு வாரங்களுக்கு (மார்ச் 27 வரை) ரத்து செய்யப்படும்.
கிருமி தொற்றியுள்ள சிங்கப்பூரர்கள் வேறு எங்கெல்லாம் சென்றுள்ளார்கள் என்பதை சுகாதார அமைச்சு கண்டுபிடித்து வருகிறது.

சிங்கப்பூரர்கள் சமய வழிபாடுகளில் ஈடுபடும்போது கொவிட்-19 தொற்று குறித்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்த மாபெரும் கூட்டத்தில் பங்கேற்ற 95 சிங்கப்பூரர்கள் பற்றிய விவரங்கள் குறித்து சுகாதார அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த மூன்று நாள் கூட்டத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 10,000 பேர் கலந்துகொண்டனர்.

கொரோனா கிருமி எளிதில் பரவக்கூடிய ஆபத்துமிக்கது என்று உலக சுகாதார நிலையத்தால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாப்பான முறையில் சமய வழிபாடுகளைக் கடைபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மசகோஸ் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!