கொரோனா கிருமித்தொற்று - ஒன்பது புதிய சம்பவங்கள்

கொரோனா கிருமித்தொற்று - ஒன்பது புதிய சம்பவங்கள்

1 mins read
0d5a8c08-29cd-4bae-96ce-406e520d68a4
-

சிங்கப்பூரில் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி ஒன்பது புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டோரில் ஐவருக்கு இந்நோய் வெளிநாட்டில் தொற்றியுள்ளது. ஒருவர், நோயால் பாதிக்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்ட மற்றொருவருடன் தொடர்பில் இருந்தாகக் கூறப்பட்டுள்ளது.

எஞ்சிய மூவர், சாப்ரா ஜூரோங்கிலுள்ள ஜோய் கார்டன்ஸ் உணவகத்தில் நடத்தப்பட்ட தனியார் விருந்து நிகழ்ச்சியுடன் தொடர்புள்ளவர்கள். பதிவாகியுள்ள புதிய சம்பவங்களுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 187க்கு உயர்ந்துள்ளது. இவர்களின் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர். 96 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.