'சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்'

'சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்'

1 mins read
f32ab1b3-3708-43f9-924c-684c3269d937
மூத்தோருக்கான லிங் குவாங் தாதிமை இல்லத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் முதியோரைப் பார்க்கும் அதிபர் ஹலிமா யாக்கோப் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிரு­மித்­தொற்று நாட்­டைப் பாதித்­துள்ள இக்­கா­ல­கட்­டத்­தில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­பது முக்­கி­யம் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார். இதில் சிங்­கப்­பூ­ரர்­கள் மெத்­த­னத்­து­டன் இருந்­து­வி­டக்­கூ­டாது என்­றார் அவர்.

சிராங்­கூன் கார்­டன் வேயில் அமைந்­தி­ருக்­கும் லிங் குவாங் தாதிமை இல்­லத்­துக்கு அதி­பர் ஹலிமா நேற்று சென்­றி­ருந்­த­போது இதைத் தெரி­வித்­தார்.

ஆரம்­ப­கால, தீவிர சிகிச்சை, சமூக ஆகிய மூன்று பிரி­வு­க­ளைச் சேர்ந்த சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளின் பாது­காப்­புக்கு முக்­கி­யத்­து­வம் கொடுப்­பது குறித்து வலி­யு­றுத்­தப்­ப­டு­வ­தால் அவர்­க­ளுக்­குக் கூடு­தல் தன்­னம்­பிக்கை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அதி­பர் ஹலிமா தெரி­வித்­தார்.

கடந்த மாதம் 24ஆம் தேதி­யன்று அங் மோ கியோ குடும்ப மருத்­துவ மருந்­த­கத்­துக்­கும் இம்­மா­தம் 1ஆம் தேதி சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்கும் அதி­பர் சென்­றி­ருந்­தார்.

அங்கு அவர் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரைப் பற்றி சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளி­டம் பேசி­னார்.

மூன்று பிரி­வு­க­ளைச் சேர்ந்த சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களும் தங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கப்­ப­டு­கிறது என்­பதை நன்கு உணர்­வ­தா­க­வும் தொடர்ந்து மிகுந்த முனைப்­பு­டன் செயல்­ப­டு­வ­தா­க­வும் அதி­பர் ஹலிமா கூறி­னார்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக முதி­யோ­ருக்­காக அர­சாங்க அமைப்­பு­கள் ஏற்­பாட்­டில் நடை­பெ­றும் நட­வ­டிக்­கை­கள் இரண்டு வாரங்­க­ளுக்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

சவால்­மிக்க இந்­தக் கால­கட்­டத்­தில் முதி­யோ­ரு­டன் அவர்­­க­ளது குடும்­பத்­தி­னர் நேரம் செல­வ­ழிக்க வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா அறி­வு­றுத்­தி­னார்.