பாதிக்கப்பட்ட துறைகளுக்குக் கூடுதல் வேலைப் பயிற்சி ஆதரவு

கொரோனா கிருமி பர­வ­லால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ள நான்கு துறை­க­ளுக்கு திறன் பயிற்­சி­யி­லும் ஊழி­யர்­களை வேறு வேலை­களில் அமர்த்­த­வும் கூடு­தல் ஆத­ரவு வழங்­கப்­படும். சுற்­றுலா, விமா­னப் போக்­கு­வ­ரத்து, சில்­லறை விற்­பனை, உணவு சேவை­கள் ஆகிய நான்கு துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்­கான மறு­தேர்ச்­சித் திட்­டங்­களை சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு வலுப்­ப­டுத்தி வரு­கிறது.

பொரு­ளி­யல் சூழல் மந்­த­மாக உள்ள இந்­தக் கால­கட்­டத்­தில் மறு­தேர்ச்­சித் திட்­டங்­கள் மிக­வும் அவ­சி­ய­மா­னவை என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­துள்­ளார். துவா­சில் உள்ள ‘எஸ்டி லாஜிஸ்­டிக்ஸ்’ நிறு­வ­னத்­திற்கு நேற்று சென்­றி­ருந்­த­போது அவர் இத­னைக் குறிப்­பிட்­டார்.

கடை­நிலை ஊழி­யர்­களை மறு­தேர்ச்சி பெறச் செய்து, அவர்­க­ளைப் புதிய வேலை­களில் அமர்த்­தும்­படி நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கில், சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்­பின் பணி­ய­மர்­வுப் பயிற்­சித் திட்­டங்­களில் அதிக கவ­னம் செலுத்­தப்­படும்.

முன்­ன­தாக, மாதத்­திற்கு ஓர் ஊழி­ய­ருக்கு 70% வரை, அதா­வது அதி­க­பட்­சம் $2,000 என்ற அடிப்­ப­டை­யில் நிறு­வ­னங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி ஊதிய ஆத­ரவு வழங்கி வந்­தது. அதி­க­பட்­சம் மூன்று மாதங்­க­ளுக்கு இந்த ஆத­ரவு வழங்­கப்­பட்டு வந்­தது. இனி, அது ஆறு மாதங்­க­ளாக நீட்­டிக்­கப்­படும். அத்­து­டன், ஆறு மாதங்­கள் அல்­லது அதற்­கும் மேல் வேலை­யில்­லா­மல் இருந்த 40 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்­கான ஊதிய ஆத­ரவு 90% வரை, அதா­வது அதி­க­பட்­சம் $3,000 என உயர்த்­தப்­படும்.

இந்த மாற்­றங்­கள், ஹோட்­டல், சில்­லறை விற்­பனை, விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆகிய துறை­களில் நடப்­பில் உள்ள பணி­ய­மர்­வுப் பயிற்­சித் திட்­டங்­க­ளுக்­கும் இது பொருந்­தும். உணவு சேவை­கள் துறைக்­கும் இதே­போன்று புதிய பணி­ய­மர்­வுப் பயிற்­சித் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

விமா­னப் போக்­கு­வ­ரத்து தவிர்த்து மற்ற மேம்­பா­டு­கள் அனைத்­தும் உட­ன­டி­யாக நடப்­பிற்கு வரும். அறை­க­லன் துறை­யில் பணி­யாற்­றும் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் மின்­னி­லக்­கப் பொறுப்­பு­க­ளைக் கையா­ளும் வகை­யில் புதிய, ஆறு மாத­கால ‘வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றும் திட்­டத்தை’ சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு அறி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!