ஏழு குழுத்தொகுதிகளில் தேர்தல் வட்டாரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று மாலை தெரிவித்தது. அங் மோ கியோ, பீஷான்-தோபாயோ, சுவா சூ காங், நீ சூன், பாசிர் ரிஸ்-பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ் ஆகிய குழுத்தொகுதிகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு அங் மோ கியோ குழுத்தொகுதியில் தேர்தல் வட்டாரங்களின் எண்ணிக்கை 62லிருந்து 64க்கு உயர்த்தப்பட்டுள்ளது. சுவா சூ காங் குழுத்தொகுதியில் தேர்தல் வட்டாரங்கள் 43லிருந்து 45க்கு உயர்த்தப்பட்டுள்ளது. பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் தேர்தல் வட்டாரங்களுக்கான எண்ணிக்கை 78லிருந்து 81க்கு உயர்ந்துள்ளது.
தேர்தல் வட்டாரம் என்பது தொகுதிக்குள் இருக்கும் ஒரு வட்டாரமாகும். ஒவ்வொரு தேர்தல் வட்டாரத்துக்கும் அதன் சொந்த வாக்களிப்பு நிலையம் இருக்கும்.
வாக்களிப்பு நிலையங்கள் அளவுக்கு அதிகமான வாக்காளர்களைக் கையாளும் சூழ்நிலை ஏற்படாதிருக்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

