தேக்கா சந்தை தற்காலிக மூடல்

தேக்கா சந்தை தற்காலிக மூடல்

1 mins read
1439dd02-f672-4a2f-999f-bf00164359b8
தேக்கா சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரும் திங்கட்கிழமை (மார்ச் 16) முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வரை தேக்கா சந்தை மூடப்படுகிறது.

சுத்தப்படுத்துதல், பழுதுபார்த்தல் பணிகளுக்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மூடப்படும் சந்தை, வழக்கமாக இரண்டு நாட்களுக்கு மட்டும்தான் மூடப்படும்.

இம்முறை கூடுதல் பணிகளுக்காக மேலும் மூன்று நாட்கள் சந்தை மூடப்படுவதாக தேக்கா சந்தை வர்த்தகர் சங்கத்தின் துணைத் தலைவரான திரு முஸ்தஃபா ‌‌‌ஷாஹுல் ஹமீது, 61, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

#தேக்கா #சந்தை மூடல்

குறிப்புச் சொற்கள்