பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி 4 உறுப்பினர் தொகுதியாகக் குறையும்

1 mins read
37c39ca5-e922-4737-9f3a-11188e6780b2
வரும் பொதுத் தேர்­த­லில் பீஷான்-தோ பாயோ குழுத்­தொகுதி, நான்கு உறுப்­பி­னர்­களைக் கொண்ட தொகு­தி­யா­கக் குறைக்­கப்­பட்டு இருக்­கிறது. கோப்புப்படம்: எஸ்டி -

அடுத்த பொதுத் தேர்­த­லில் பீஷான்-தோ பாயோ குழுத்­தொகுதி, நான்கு உறுப்­பி­னர்­களைக் கொண்ட தொகு­தி­யா­கக் குறைக்­கப்­பட்டு இருக்­கிறது.

இப்­போது அந்­தத் தொகு­தி­யின் மொத்த உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை ஐந்து. பீஷான்-தோ பாயோ குழுத்­தொ­கு­தி­யில் உள்­ள­டங்­கும் பீஷான் நார்த் பகு­தி­யில் இருந்து மேரி­ம­வுண்ட் என்ற புதிய தனித்­தொ­குதி உரு­வாக்­கப்­பட்டு இருக்­கிறது.

தேர்­தல் தொகுதி எல்லை மறு­ஆய்வுக் குழு இவ்­வாறு பரிந்­து­ரைத்திருக்­கிறது. இதன் கார­ண­மாக, இந்­தக் குழுத்­தொ­குதி வாக்­கா­ளர்­க­ளின் எண்­ணிக்கை 126,556லிருந்து 100,036 பேரா­கக் குறை­யும். புதிய பீஷன்-தோ பாயோ குழுத்­தொ­குதி, அரு­கில் இருக்­கும் பொத்­தோங் பாசிர் தனித்­தொ­கு­தி­யைச் சேர்ந்த 3,592 வாக்­கா­ளர்­க­ளைத் தன்­னு­டன் சேர்த்­துக்­கொள்­ளும்.

தனித்தொகு­தி­யாக பொத்­தோங் பாசிர் தொடர்ந்து இருக்­கும். இது, மரின் பரேட் குழுத்­தொ­கு­தி­யில் இருந்து 5,404 வாக்­கா­ளர்­க­ளைப் பெற்று, மொத்­தம் 18,551 வாக்­கு­க­ளு­டன் தேர்­த­லைச் சந்­திக்­கும்.