அறிகுறிகளுடன் சிங்கப்பூர் வருவோர் 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க ஆணை

அறிகுறிகளுடன் சிங்கப்பூர் வருவோர் 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க ஆணை

1 mins read
03a10559-cf20-48bd-b627-11d9a1e59fa6
வெளி­நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும்­போது காய்ச்­சல், சுவா­சப் பிரச்­சினை போன்­றவை இருந்­தால் அவர்­கள் 14 நாட்­களுக்கு வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான அறிக்கை வழங்­கப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர்  லாரன்ஸ் வோங் கூறி­யுள்­ளார். கோப்புப்படம்: எஸ்டி -

வெளி­நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும்­போது காய்ச்­சல், சுவா­சப் பிரச்­சினை போன்­றவை இருந்­தால் அவர்­கள் 14 நாட்­களுக்கு வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான அறிக்கை வழங்­கப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் கூறி­யுள்­ளார்.

அவர்­க­ளது நாசி திர­வத்­தில் நடத்தப்படும் பரி­சோ­தனை முடி­வு­கள் அவர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இல்லை என்று காட்­டி­னா­லும் அவர்­கள் 2 வாரங்­க­ளுக்கு எல்லா நேரத்­தி­லும் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும்.

அண்­மைக்­கா­ல­மாக, அனைத்­து­லக அள­வில் கொவிட்-19 படு­வே­க­மாக பரவுவ­தா­ல் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது.

கிரு­மித்­தொற்று அறி­கு­றி­க­ளு­டன் சிங்­கப்­பூ­ருக்­கு வரு­வோ­ருக்கு சோத­னைச்­சா­வ­டி­களில் நாசி திரவச் சோதனை இம்­மா­தம் 4ஆம் தேதி முதல் செய்­யப்­ப­டு­கிறது.

வெளி­நாட்­டி­லி­ருந்து வரும் சுற்­றுப்பய­ணி­கள் அந்­தக் கால­கட்டத்தை ஹோட்­டல்­களில் கழிக்க வேண்­டி­யி­ருக்­கும். கிரு­மித்­தொற்று இருப்­ப­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர் கூடுதல் பரி­சோ­த­னைக்­காக மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­ப­டு­வர்.

கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கையா­ளும் அமைச்­சர்­நிலை பணிக்­கு­ழு­வின் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான திரு வோங், "நாசி திர­வத்­தைக்­ கொண்டு மேற்­கொள்­ளப்­படும் பரி­சோ­த­னை­கள் கொரோனா தொற்றை உறு­திப்­படுத்­தா­விட்­டா­லும், அந்த நப­ருக்கு கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­தி­ப­டக் கூற அது மட்­டும் போதாது.

"கிரு­மித்­தொற்று அடைவு கால­மாக அது இருக்­க­லாம். அதற்­குப் பிறகு அவ­ருக்கு பாதிப்பு ஏற்­ப­ட­லாம்," என்­றார்.

எந்த நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சம்­ப­வங்­கள் இறக்­கு­ம­தி­யா­கி­யுள்­ள­னவோ அந்த நாடு­க­ளி­லி­ருந்து வரு­வோ­ரி­டம் கூடு­தல் கவ­னம் செலுத்­தப்­படும் என்­றும் இது மிக­வும் கடு­மை­யாக நடை­மு­றைப்­படுத்­தப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.