இந்தியா, ஐரோப்பாவுக்கு விமானச் சேவைகளைக் குறைக்கும் எஸ்ஐஏ

1 mins read
c943d61f-0195-499b-b26d-43d41b3f2337
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சில்க்ஏர் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 26ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. கோப்புப்படம்: எஸ்டி -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சில்க்ஏர் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 26ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கான விசாக்களை ரத்து செய்வதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

அதையடுத்து, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சீனாவுக்கும் இத்தாலிக்குமான விமானச் சேவைகளை எஸ்ஐஏ ஏற்கெனவே குறைத்துவிட்டது. மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகியவற்றுக்கு பயணக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் விதித்துள்ளதை அடுத்து, ஐரோப்பாவுக்கான கூடுதல் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆக அண்மைய அறிவிப்புகள், விமானப் போக்குவரத்து துறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எஸ்ஐஏ ஆராய்ந்து வருவதாக அதன் பேச்சாளர் கூறினார்.