யூனோஸ் சேமிப்புக்கிடங்கில் தீ

யூனோஸ் சேமிப்புக்கிடங்கில் தீ

1 mins read
da0771c4-f761-40b8-a320-939a50049bd4
தீ அணைக்கப்பட்ட பிறகு அது மீண்டும் பரவாமல் தடுக்க அந்தப் பொருட்களின் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதைக் காட்டும் படங்கள் வெளியாகின. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை -

யூனோஸ் அவென்யூ 7ல் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் தீப்பற்றியதாக இன்று (மார்ச் 14) அதிகாலை 5.25 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தீயணைப்புப் பணியில் 40 வீரர்களும் 12 அவசரகால வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக படை தெரிவித்தது.

தீ அணைக்கப்பட்ட பிறகு அது மீண்டும் பரவாமல் தடுக்க அந்தப் பொருட்களின் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதைக் காட்டும் படங்கள் வெளியாகின.

காலை 8 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவித்த படை, இதில் யாருக்கும் காயமில்லை என்று குறிப்பிட்டது.

தீப்பற்றியதற்கான காரணம் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

#யூனோஸ் #தீ

குறிப்புச் சொற்கள்