ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

2 mins read
e673386c-f026-4c6d-a89b-feb590233084
சந்தேக நபரைக் கைது செய்த அதிகாரிகள். படம்: சமூக ஊடகம் -

பூன் கெங்­கில் உள்ள காலாங் அக்­கம்­பக்க போலிஸ் சாவ­டி­யின் முன்பு தீ மூட்­டி­ய­தாக 30 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்டு, அவர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக போலிஸ் தெரி­வித்­தது. இச்சம்­ப­வத்­தில் எவருக்­கும் காய­மில்லை. இந்­தச் சம்­ப­வம் பயங்­க­ர­வா­தச் செய­லு­டன் தொடர்­பு­டை­ய­தில்லை என்­றும் போலிஸ் குறிப்­பிட்­டது.

தனி­யா­கச் செயல்­பட்ட அந்த ஆட­வர், சில பைகளில் இருந்த துணி­க­ளைப் போட்டு, பெட்­ரோல், டீசல் ஆகி­ய­வற்றை அதன் மீது ஊற்றி தீ வைத்­த­தா­க­வும் அக்­கம்­பக்க போலிஸ் சாவ­டி­யின் கண்­ணா­டிக் கதவை நொறுக்­கி­ய­தா­க­வும் போலி­சார் தெரி­வித்­த­னர்.

போலிஸ் சாவ­டிக்கு அரு­கில் இருந்த பல தூண்­களில் அவர் 'ஐஎஸ்­ஐ­எஸ்' என கிறுக்­கி­யி­ருந்­தா­லும் அந்த ஆட­வர் 'சமூக ஏற்­றத்­தாழ்­வின் தொடர்­பில் வருத்­தப்­படும் மனக்­கு­றை­யு­டைய ஆள்' என்­பதை முதல்­கட்ட விசா­ர­ணை­கள் தெரி­விப்­ப­தாக போலி­சார் தெரி­வித்­த­னர். சிங்­கப்­பூ­ர­ரான சிவ­பி­ர­காஷ் மயில்­ரா­வ­ணன் எனும் அந்த ஆட­வர் மீது தீவைக்­கும் செயல் புரிந்­த­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

மேல் விசா­ர­ணைக்­காக அவர் காவ­லில் வைக்­கப்­ப­டு­வார் என்­றும் மன­ந­லப் பரி­சோ­த­னைக்கு அவரை அனுப்­பு­வ­தற்­கான நீதி­மன்ற ஆணையை போலி­சார் கோரு­வர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் பின்­னி­ரவு நேரத்­தில் சம்­பவ இடத்­துக்­குச் சென்ற ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், 'ஐஎஸ்­ஐ­எஸ்' என்ற கிறுக்­கல்­கள் மூன்று இடங்­களில் காணப்­பட்­ட­தா­க­வும் இழி­வான கிறுக்­கல்­கள் சில, அந்த போலிஸ் சாவ­டி­யைச் சுற்­றி­யி­ருந்த கீழ்த்­த­ளச் சுவர்­களில் காணப்­பட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டது. புளோக் 105 டவ்­னர் ரோட்­டில் இருக்­கும் அந்த போலிஸ் சாவ­டி­யின் கண்­ணாடி கதவு நொறுங்­கி­யி­ருந்­த­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

நேற்று முன்­தி­னம் இரவு 11 மணி­ய­ள­வில் போலிஸ் சாவ­டி­யி­லி­ருந்து பலத்த வெடிப்­புச் சத்­தம் கேட்­ட­தாக அப்­ப­குதி குடி­யி­ருப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர். பூன் கெங் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த ரெனீ சியோங், போலிஸ் சாவ­டி­யின் முன்பு தீப்­பற்றி எரிந்­த­தைக் கண்­ட­தா­கச் சொன்­னார். போலிஸ் சாவ­டிக்கு முன்பு நிறுத்­தப்­பட்­டி­ருந்த லாரி ஒன்­றுக்­குச் சென்ற ஓர் ஆட­வர், அங்­கி­ருந்த சாயம் தெளிப்­பானை எடுத்து வந்து அரு­கிலிருந்த சுவ­ரில் கிறுக்­கி­ய­தைப் பார்த்­த­தாக குமாரி சியோங் கூறி­னார்.

இச்சம்­ப­வம் குறித்த காணொ­ளி­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வின. அதில், ஆட­வர் ஒரு­வர் சட்­டை­யைக் கழற்றி வீசு­வ­தை­யும் கையில் கத்தி போன்று காணப்­படும் பொரு­ளை வைத்­தி­ருப்­ப­தை­யும் காண முடிந்­தது.

மறு­வ­டி­வ­மைக்­கப்­பட்ட அதி­காரி­யில்லா அக்­கம்­பக்க போலிஸ் சாவடி அது என்று ஜாலான் புசார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹெங் சீ ஹாவ் கூறி­னார்.

யாருக்­கும் காய­மில்லை என்­பதை அறிந்து நிம்­மதி அடைந்­த­தா­கக் குறிப்­பிட்ட அவர், இந்த வட்­டா­ரம் பாது­காப்­பாக இருப்­பதை போலி­சார் உறு­திப்­ப­டுத்­து­வர் என்றும் கூறி­னார்.