தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'தேர்தலை நடத்த இது சரியான தருணம் அல்ல'

2 mins read
45a83e38-0165-42dc-bad4-2324a0fb13b9
கொவிட்-19 கிருமி பர­வல் மெது­வ­டை­வ­தற்­கான தெளி­வான அறி­கு­றி­கள் தென்­படும் வரை சிங்­கப்­பூ­ரில் பொதுத் தேர்­தலை நடத்த வேண்­டாம் என சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் சீ சூன் ஜுவான் (இடமிருந்து நான்காவது) அர­சாங்­கத்­தைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார். படம்: எஸ்டி, கெவின் லிம் -

கொவிட்-19 கிருமி பர­வல் மெது­வ­டை­வ­தற்­கான தெளி­வான அறி­கு­றி­கள் தென்­படும் வரை சிங்­கப்­பூ­ரில் பொதுத் தேர்­தலை நடத்த வேண்­டாம் என சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் சீ சூன் ஜுவான் அர­சாங்­கத்­தைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

தேர்­தல் தொகுதி எல்லை அறிக்கை நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அடுத்த தேர்­தல் கூடிய விரை­வில் நடத்­தப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

கொரோனா கிரு­மியைக் கொள்ளைநோய் என உலக சுகா­தார நிறு­வ­னம் அண்­மை­யில் அறி­வித்­துள்ள நிலை­யில், தேர்­தலை நடத்­து­வது "சமூக பொறுப்­பற்­றது" என்று டாக்­டர் சீ கருத்­து­ரைத்­தார்.

ரத்த நன்­கொடை வழங்க டோபி காட் பகு­தி­யில் உள்ள ரத்த வங்கி ஒன்­றுக்கு நேற்று தமது கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளு­டன் சென்ற டாக்­டர் சீ, "கொரோனா கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து நமது கவ­னத்­தைத் திசை­தி­ருப்­பு­வ­தற்கு இது சரி­யான தரு­ணம் அல்ல," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

காற்­பந்து ஆட்­டங்­கள், மோட்­டார் வாக­னப் பந்­த­யங்­கள் உள்­ளிட்ட அனைத்­து­லக விளை­யாட்டு நிகழ்­வு­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது அல்­லது ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தைச் சுட்­டிய டாக்­டர் சீ, சிங்­கப்­பூ­ரில் பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு போதிய கால அவ­கா­சம் இருப்­ப­தா­கச் சொன்­னார்.

அடுத்த பொதுத் தேர்­தல் அடுத்த ஆண்டு ஏப்­ர­லுக்­குள் நடத்­தப்­பட வேண்­டும்.

கொவிட்-19 பர­வி­வ­ரும் கால­கட்­டத்­தில் தேர்­தலை நடத்­துவதில் பெரிய அள­வி­லான அக்­கறை நில­வு­வ­தாக டாக்­டர் சீ தெரி­வித்­தார்.

உதா­ர­ணத்­திற்கு, வாக்­குச் சாவ­டி­க­ளி­லும் பிர­சா­ரங்­க­ளி­லும் மக்­கள் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் நெருங்­கிய தொடர்­பில் இருக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­றார் அவர்.

தற்­போ­தைய நில­வ­ரத்­தின்­படி, கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தி­லேயே அரசு அதன் வளங்­களை முன்­னு­ரி­மைப்­ப­டுத்த வேண்­டும் என்று டாக்­டர் சீ வலி­யு­றுத்­தி­னார்.

கிருமி பரவி வரும் காலத்­தில் பொதுத் தேர்­தலை நடத்த வேண்­டாம் என சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்­சி­யைப் போலவே மற்ற எதிர்க்­கட்­சி­களும் அர­சாங்­கத்­தைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளன.

இந்த நேரத்­தில் தேர்­தலை நடத்­தி­னால், கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த அண்­மை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களுக்கு பலன் தரா­மல் போய்­வி­டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன.