முதியோருக்கான புதிய வசதிகளுடன் மூன்றாவது நிலையம்

முதியோருக்கான புதிய வசதிகளுடன் மூன்றாவது நிலையம்

2 mins read
351f5ced-6575-4060-8277-4808d61fc6b0
புதிய வளாகத்தில் திருவாட்டி அலிஸ் சோவுக்கு பராமரிப்பாளர் தே வார் சோ உதவுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் முதி­யோ­ருக்­கான தற்­சார்பு வச­தி­க­ளு­டன் கூடிய மூன்­றா­வது வளா­கம் நேற்று திறந்து வைக்­கப்­பட்­டது.

அங்கு முதி­யோர் கூடு­தல் தற்­சார்­பு­டன் தங்­க­ளது தின­சரி தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்­து­கொள்ள வாய்ப்­பு­கள் இருக்­கும் அதே நேரத்­தில், அவர்­கள் பயிற்சி பெற்ற பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளின் கண்­கா­ணிப்­பின் கீழ் இருப்­பர்.

புதுப்­பிக்­கப்­பட்ட ஒரு வீடான அந்த வளா­கம், செம்­ப­வாங் கடைத்தொகுதிக்குப் பின்­னால் உள்­ளது. செயிண்ட் பெர்­னா­டெட் லைஃப்ஸ்­டைஸ் வில்­லேஜ் குழு­வில் இருக்­கும் அத்­த­கைய வளா­கங்­களில் இது ஆக நவீ­ன­மா­ன­தா­கும். ஆடம் ரோடு, புக்­கிட் தீமா ஆகிய இடங்­களில் அத்­த­கைய இரண்டு வச­தி­கள் ஏற்­கெ­னவே உள்­ளன.

செயின்ட் பெர்­னா­டெட் நிலை­யங்­கள் அனைத்­தும் திரு­வாட்டி பெலிண்டா வீ என்­ப­வ­ரால் நடத்­தப்­ப­டு­கின்­றன. புக்­கிட் தீமா­வில் உள்ள குட் ஷெப்­பர்ட் லாஃப்ட் பரா­ம­ரிப்பு இல்­லத்­தின் இணை நிறு­வ­னர் அவர்.

அந்த வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்த விரும்­பும் மூத்­தோர் அங்கு குறைந்­த­பட்­சம் ஆறு மாதங்­க­ளுக்­குத் தங்க வேண்­டும். மாதாந்­திர கட்­ட­ணம் $4,000 முதல் $5,000 வரை. துணி துவைப்­பது உள்­ளிட்ட பல சேவை­கள் அங்கு வழங்­கப்­ப­டு­கின்­றன. எட்டு முதி­யோ­ருக்கு ஒரு பயிற்சி பெற்ற ஊழி­யர் என்ற விகி­தத்­தில் ஊழி­யர்­கள் அவர்­க­ளைக் கண்­கா­ணிப்­பர்.

அத்­த­கைய வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்த விரும்­பும் முதி­யோ­ருக்கு சலு­கை­கள் ஏதும் இல்லை.

இந்த வளா­கத்­தில் உள்ள ஒரு­வர் தங்­கும் அறை, இரு­வர் தங்­கும் அறை ஆகி­ய­வற்­றில் 10 பேர் வரை தங்­க­லாம்.

முதி­ய­வர்­கள் துடிப்­பான, மற்­ற­வர்­க­ளு­டன் கலந்­து­ற­வா­டக்­கூ­டிய வாழ்க்­கையை வாழ ஊக்­கு­விப்­பதே இத்­த­கைய நிலை­யங்­க­ளின் நோக்­கம் என்­றார் திரு­வாட்டி வீ.

அந்த நிலை­யத்­தில் நட­மாட்ட கண்­கா­ணிப்பு உணர் கரு­வி­கள் பொருத்­தப்­பட்­டுள்­ள­து­டன் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­கா­ணித்து அவர்­களுக்கு வேண்­டிய உத­வி­களை கண்­கா­ணிப்­பா­ளர்­கள் செய்­வ­தற்கு ஏற்ற தொழில்­நுட்ப வச­தி­கள் உள்­ளன. அங்கு மின்­தூக்கி, நீச்­சல் குளம் போன்ற வச­தி­களும் உள்­ளன.