சிங்கப்பூரில் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான தகுதியுடைய சிங்கப்பூரர்கள் இடம்பெற்றுள்ள பதிவேடு தயாராக உள்ளது. நேற்று தொடங்கி இம்மாதம் 27ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு அது வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு, அதன் ஆக அண்மைய அறிக்கையை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து வாக்காளர் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படுவதற்கான அறிகுறி இது எனக் கூறப்படுகிறது.
21 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் வாக்காளர் பதிவேட்டில் தங்களது விவரங்களைச் சரிபார்க்க, தேர்தல் துறையின் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம். அல்லது 'சிங்பாஸ்' செயலியை நாடலாம். தேசிய அடையாள அட்டை அல்லது கடப்பிதழை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு அருகிலுள்ள சமூக மன்றத்திற்கோ பிரின்சப் லிங்கில் அமைந்துள்ள தேர்தல் துறை அலுவலகத்திற்கோ மக்கள் செல்லலாம்.
வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள், அங்கிருக்கும் சிங்கப்பூர் தூதரத்திற்குச் செல்லலாம்.

