கிருமி தொற்றியோர் இங்கு 10 பள்ளிவாசல்களுக்கு சென்றனர்

கிருமி தொற்றியோர் இங்கு 10 பள்ளிவாசல்களுக்கு சென்றனர்

1 mins read
a7b93997-321c-4c76-9bb2-d0bb33ee4943
பாதிக்கப்பட்டுள்ள பத்து பள்ளிவாசல்களில் ஒன்றான மஸ்ஜித் ஜாமிஆ (சூலியா). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கோலா­லம்­பூர் பள்­ளி­வா­சல் ஒன்று ஏற்­பாடு செய்த சமய நிகழ்­வில் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­களில் ஐவர் இங்கு திரும்­பிய பின்­னர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டது உறு­தி­யா­னது. ஆனால் அவர்­கள் கிருமி பாதிப்­புக்­குள்­ளா­கி­யி­ருந்த சம­யத்­தில் சிங்­கப்­பூ­ரி­லுள்ள 10 பள்­ளி­வா­சல்­ க­ளுக்­குச் சென்­று­விட்­ட­னர்.

இத­னால் அந்த 10 பள்­ளி­வா­சல்­க­ளுக்­குச் சென்ற மற்­ற­வர்­கள், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஏதே­னும் ஒரு­வ­ரு­டன் தொடர்­பில் இருந்தி­ருக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) நேற்று அறிக்கை வெளி­யிட்­டது.

கிருமி தொற்­றிய ஐவ­ரும் இம்­மா­தம் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பள்­ளி­வா­சல்­க­ளுக்­குச் சென்­ற­தாக கூறப்­ப­டு­கிறது.

மஸ்­ஜித் அல்-இமான், மஸ்­ஜித் அல்-முத்தகீன், மஸ்­ஜித் ஹஜ்ஜா ஃபாத்திமா, மஸ்­ஜித் ஹஜ்ஜா ரஹி­மபி கெபுன் லிமாவ், மஸ்­ஜித் காசிம், மஸ்­ஜித் பெட்­டம்­பட்­டான் மலாயு செம்­ப­வாங், மஸ்­ஜித் சுல்­தான், மஸ்­ஜித் அல்-மவத்தா, மஸ்­ஜித் ஜாமிஆ (சூலியா) மற்­றும் மஸ்­ஜித் அல்-இஸ்­தி­காமா ஆகி­யவை பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளா­கும்.

இப்­பத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கு சென்­ற­வர்­கள் தங்­க­ளின் சுகா­ தாரத்தை இரண்டு வாரங்­க­ளுக்­குக் கண்­கா­ணிக்­கு­மாறு முயிஸ் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

இதன் தொடர்­பில் வெளி­நா­டு­களில் நடை­பெ­றும் சம­யக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளின் திட்­டங்­களை மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

"இது சவால்­மிக்க கால­கட்­டம். ஆனால் நம் வளங்­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கிரு­மி­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கி­றோம் என்­ப­தில் நிம்­மதி கொள்­வோம்," என்­றார் அவர்.

துப்­பு­ரவு பணி­க­ளுக்­காக சென்ற வெள்­ளிக்­கி­ழமை முதல் ஐந்து நாட்­க­ளுக்கு இங்­குள்ள 70 பள்­ளி­வா­சல்­கள் மூடப்­பட்­டுள்­ளன.