'வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூர் மாணவர்கள் திரும்ப வேண்டும்'

1 mins read
e0914a44-86c0-418c-8706-10a3cc92b1b5
கோப்புப்படம்: எஸ்டி -

அதிகாரபூர்வ பயிற்சிகளுக்காக இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள மாணவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்புமாறு கல்வி அமைச்சு நேற்று கேட்டுக்கொண்டது. இங்குப் பதிவாகி வரும் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் அதிகரிப்பதைத் தடுக்க அமைச்சு இம்முடிவை எடுத்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்பும் திட்டங்களும் ஜூலை மாதம் இறுதிவரை ரத்து செய்யப்படும். இவ்வாறு சிங்கப்பூர் திரும்புவதால் மாணவர்களின் படிப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அந்தந்தக் கல்வி நிலையங்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குக் கற்றலில் தகுந்த ஆதரவை அளிக்கும் என்றும் அமைச்சு கூறியது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் வெளிநாடுகளிலுள்ள அதன் மாணவர்களை ஏற்கெனவே சிங்கப்பூருக்குத் திரும்பச் சொல்லிவிட்டது.