சிறுமியின் உதட்டில் முத்தமிட்ட சமயக் கல்வி ஆசிரியருக்குச் சிறை

சிறுமியின் உதட்டில் முத்தமிட்ட சமயக் கல்வி ஆசிரியருக்குச் சிறை

1 mins read
f209341d-0c7b-4a12-b4ec-d93b746bacc7
நாளை மறுதினம் (மார்ச் 18) அரசு நீதிமன்றத்தில் அந்த ஆடவர் சரணடைவார். -

தம்மிடம் சமயம் தொடர்பான கல்வி பயில தமது வீட்டிற்கு வந்த எட்டு வயது சிறுமியின் உதட்டில் முத்தமிட்ட இஸ்லாமிய சமயக் கல்வி ஆசிரியர் ஒருவருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் அடையாளத்தைக் காக்க, அந்தச் சமயக் கல்வி ஆசிரியரின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தக் குற்றத்தைப் புரிந்தபோது அந்த 66 வயது ஆடவர் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) அங்கீகாரம் பெற்ற சமயக் கல்வி ஆசிரியராக இருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முயிஸ் தெரிவித்தது.

$15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்த ஆடவர், சிறைத் தண்டனையைத் தொடங்க நாளை மறுதினம் (மார்ச் 18) அரசு நீதிமன்றத்தில் சரணடைவார்.

குறிப்புச் சொற்கள்