'நீண்டகால பாதிப்புக்குத் தயாராகவும்'

'நீண்டகால பாதிப்புக்குத் தயாராகவும்'

2 mins read
f9dfe319-e3d5-468b-9a05-e90f527faa08
-

கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்தொற்று கார­ண­மாக நீண்­ட­கால பாதிப்­புக்­குத் தயா­ராக வேண்­டும் என்று வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

"எல்­லாம் சரி­யா­கி­வி­டும் என்ற விருப்­பம் இருந்­தா­லும் நிலைமை மேலும் மோச­மா­கும் என்று எதிர்­பார்த்து அதற்­குத் தக்­க­வாறு செயல்­பட வேண்­டும்," என்று அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் சிஎன்­பி­சிக்கு கடந்த புதன்­கி­ழ­மை­யன்று அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

"உங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தைப் பற்றி நன்­றாக தெரி­யும். நாங்­கள் எல்­லா­வற்­றுக்கும் முக்­கி­யத்­து­வம் கொடுத்து தீவி­ர­மா­கச் செயல்­ப­டு­வோம். பிரச்­சி­னை­களை மெத்­த­னப்­போக்­கு­டன் விட்­டு­வி­ட­மாட்­டோம்.

"ஆக மோச­மான நிலை­மையை எதிர்­பார்த்து அதை எதிர்­கொள்ள தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­போம்.

"எங்­கள் மக்­க­ளு­டன் நாங்­கள் தொடர்­பில் உள்­ளோம். நாங்­கள் என்ன செய்­கி­றோம் என்­பது எங்­கள் மக்­க­ளுக்கு நன்­றா­கப் புரி­கிறது," என்­றார் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன்.

சிஎன்­பிசி நிகழ்ச்சி படைப்­பா­ளர்­கள் ஸ்ரீ ஜெக­ராஜா, மார்ட்­டின் சூங் ஆகி­யோர் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் பதி­ல­ளித்­தார்.

"உலக நாடு­கள் ஒன்­றி­ணைந்து பரி­சோ­த­னைச் சாத­னங்­கள், தடுப்­பூ­சி­கள் ஆகி­ய­வற்றை உரு­வாக்க ஆகச் சிறந்த அணு­கு­மு­றை­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள வேண்­டும் எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­கள் நன்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட வேண்­டும்," என்­றார் அமைச்­சர்.

கொரோனா கிரு­மித்­தொற்று மோச­மாக இருக்­கும் இந்­நே­ரத்­தில் பொதுத் தேர்­தல் அறி­விக்­கப்­ப­டு­வது குறித்து அமைச்­ச­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், "அது­கு­றித்து நீங்­கள் பிர­த­ம­ரி­டம்­தான் கேட்க வேண்­டும்," என்று கூறி­னார்.

"இப்­போ­தைய சூழ்­நி­லைக்கு தேர்­தல் முக்­கி­ய­மல்ல. கொரோனா கிரு­மித்­தொற்றை முறி­ய­டிப்­பதே அதி­முக்­கி­ய­மா­னது.

"அண்டை நாடு­கள், வட்­டார நாடு­கள், உலக நாடு­கள் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து கொரோனா கிரு­மித்­தொற்றை முறி­ய­டிக்க வேண்­டும்.

"கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான செயல்­பா­டு­களில் கவ­னம் செலுத்த வேண்­டும்.

"திட்­டங்­களை ஒழுங்­காக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.

"அர­சி­யல் தொடர்­பான பணி­கள் தானா­கவே நடக்­கும்," என்று அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.