ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

1 mins read
2400bd80-cb7c-475f-b3a2-189b06eb3074
-

சிங்கப்பூரில் மேலும் 14 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. இதுவே ஒரே நாளில் ஆக அதிகமாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை.

அந்த 14 பேரில் ஒன்பது பேருக்கு அவர்கள் வெளிநாட்டில் இருந்தபோது அந்த நோய் தொற்றியதாக தெரிவிக்கப்பட்டது. லெங்கோக் பாருவில் உள்ள மை வொர்ல்டு பாலர் பள்ளியில் கற்பிக்கும் 28 வயது பிலிப்பீன்ஸ் பெண்ணுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்தப் பாலர் பள்ளியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. நேற்று முதல் இம்மாதம் 27ஆம் தேதி வரை அந்தப் பாலர் பள்ளி தற்காலிகமாக மூடப்படும்.

அப்பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்படும். அப்பள்ளியில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோரின் உடல்நிலை மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.