சிறுமியின் உதட்டில் முத்தமிட்ட சமயக் கல்வி ஆசிரியருக்குச் சிறை

சிறுமியின் உதட்டில் முத்தமிட்ட சமயக் கல்வி ஆசிரியருக்குச் சிறை

1 mins read

தம்மிடம் சமயம் தொடர்பான கல்வி பயின்ற 8 வயது சிறுமியின் உதட்டில் முத்தமிட்ட இஸ்லாமிய சமயக் கல்வி ஆசிரியருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்க, அந்தச் சமயக் கல்வி ஆசிரியரின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தக் குற்றத்தைப் புரிந்தபோது அந்த ஆடவர் சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற சமயக் கல்வி ஆசிரியராக இருந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மன்றம் தெரிவித்தது.