தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிக்கு $200 லஞ்சம் கொடுக்க முயன்ற 61 வயது ஆடவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதியன்று வோங் சின் வா இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஈசூன் வட்டாரத்தில் கூரையுள்ள நடைபாதையில் வோங் புகைபிடித்துக்கொண்டிருந்ததை வாரியத்தின் இரண்டு அதிகாரிகள் பார்த்தனர். அந்த அதிகாரிகளில் ஒருவரான திரு கோபிநாத் முனுசாமி, வோங்கிடம் அவரது அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு அதில் இருந்த அவரது தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்யத் தொடங்கினார்.
இந்நிலையில், திரு கோபிநாத் முனுசாமியிடம் வோங் லஞ்சம் கொடுக்க முயன்றார். வோங் கொடுத்த லஞ்சப் பணத்தை மறுத்த திரு கோபிநாத் முனுசாமி அதுகுறித்து லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் புகார் செய்தார். லஞ்சம் வாங்காமல் புகார் செய்த திரு கோபிநாத் முனுசாமியை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு பாராட்டியது.2020-03-17 06:00:00 +0800

