தாயகம் நோக்கி விரையும் சிங்கப்பூர் மாணவர்கள்

தாயகம் நோக்கி விரையும் சிங்கப்பூர் மாணவர்கள்

1 mins read

உலக நாடு­களை கொரோனா கிரு­மித்­தொற்று வாட்டி வரும் வேளை­யில் வெளி­நா­டு­களில் மாண­வர் பரி­மாற்­றத் திட்­டம் அல்­லது வேலை அனு­ப­வப் பயிற்­சி­களில் ஈடு­பட்­டுள்ள சிங்­கப்­பூர் மாண­வர்­கள் தாய­கம் நோக்­கி விரை­கின்­ற­னர். சிலர் சிங்­கப்­பூர் வந்­த­டைந்­து­விட்­ட­னர். எஞ்­சி­யி­ருப்­போர் விமா­னப் பய­ணச்­சீட்டு வாங்க விரை­கின்­ற­னர்.

அடுத்த சில மாதங்­களில் தங்­க­ளுக்­காக தங்­க­ளது கல்வி நிலை­யங்­கள் என்ன திட்­டம் வகுத்­துள்­ளன என்­பதைத் தெரிந்­து­கொள்ள அவர்­கள் முயன்று வரு­கின்­ற­னர். ஜூலை மாதம் இறுதி வரை மாண­வர்­க­ளுக்­கான அனைத்து வெளி­நாட்­டுத் திட்­டங்­களும் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆசி­யான் நாடு­கள், ஜப்­பான், சுவிட்­சர்­லாந்து, பிரிட்­டன் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரு­வோர் தங்­களை 14 நாட்­க­ளுக்­குத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று சிங்­கப்­பூர் அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது. இது நேற்று முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. கிருமித்தொற்றைக் குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.