அடுத்த நான்கு வாரங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள சீக்கிய கோயில்களில் உணவு விநியோகம், பரிமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
ஆனால் சீக்கிய கோயில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு உணவு விநியோக விதிமுறை சற்று தளர்த்தப்படும்.
திருமணத்தில் கலந்துகொள்வர் சாப்பிட வரும்போது பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுவர். இதன் மூலம் அவர்களுக்கிடையிலான தொடர்பு கட்டுப்படுத்தப்படும்.
மத்திய சீக்கிய கோயிலிலும் சீலாட் சாலை சீக்கிய கோயிலிலும் இறை வழிபாட்டு சடங்குகள் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்று மோசமடைந்து வரும் வேளையில் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சீக்கிய கோயில்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கின்றன.
சீக்கிய கோயில்களுக்குத் தற்போது வருவதைத் தவிர்க்குமாறு முதிய சீக்கியர்களுக்கு சீக்கிய கோயில்கள் வலியுறுத்தியுள்ளன.

