பொருளியல் சுதந்திர பட்டியலில் சிங்கப்பூருக்கு முதல் இடம்

பொருளியல் சுதந்திர பட்டியலில் சிங்கப்பூருக்கு முதல் இடம்

1 mins read
3da0c705-a207-4bbf-8dec-ec1fc4d2ff81
'பொரு­ளி­யல் சுதந்­தி­ரம் 2020' ஆய்­வில் சிங்­கப்­பூர் முத­லி­டம் பெற்­றுள்­ளது.  படம்: கெல்வின் சிங் -

உல­கி­லேயே ஆக அதி­கப் பொரு­ளி­யல் சுதந்­தி­ரம் பெற்ற நாடாக ஹாங்­காங் 1995ஆம் ஆண்டு முதல் இருந்து வந்­தது. இருப்­பி­னும் ஹாங்­காங்­கில் தற்­போது நிலவி வரும் அமை­தி­யின்­மை­யால் அனைத்­து­லக நிதி மையம் என்ற அதன் தகுதி வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் 'பொரு­ளி­யல் சுதந்­தி­ரம் 2020' ஆய்­வில் சிங்­கப்­பூர் முத­லி­டம் பெற்­றுள்­ளது.

சென்ற ஆண்­டைப் போலவே இவ்­வாண்­டும் தொடர்ந்து அதன் நிலை­யைத் தக்க வைத்­துக்­கொண்­ட­தால் சிங்­கப்­பூர் பட்­டி­ய­லில் முதல் இடம்பெற்­றது.

வர்த்­த­கர்­க­ளுக்­குச் சிறந்த இட­மா­கச் சென்ற ஆண்டு வரை விளங்­கிய ஹாங்­காங், அதன் அர­சி­யல் மற்­றும் சமூக நெருக்­க­டி­யால் முத­லீட்டு வாய்ப்­பு­களை இழந்­துள்­ள­தாக ஆய்வு அறிக்கை கூறு­கிறது.